தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…?

#BreakingNews : தமிழகத்தில் 94,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 63 பேர் பலி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 94,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் 7-வது நாளாக இன்றும் 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் இன்று புதிதாக 3,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94,041- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,533-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,700 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை 297 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 226 பேருக்கும், சேலத்தில் 178 பேருக்கும், திருவள்ளூரில் 147 பேருக்கும், ராமநாதபுரத்தில் 111 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 86 பேருக்கும், திருவண்ணாமலை 42 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 1,264-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,852 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 52,296-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக தற்போது வரை 39,896 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை

Wed Jul 1 , 2020
கொரோனாவை தொடர்ந்து இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் பெருமழையால், சென்னை வெள்ளக் காடாக மாறி பாதிப்புக்கு உள்ளாகும் என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையை விடவும் வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடும் மழை பெய்யும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நவம்பர் 30 […]
n195078354b2af6387ddc6af84de5f4c0359150e115bddca1a81910ea9ddeb0ab9ef48eff1

You May Like