டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவித்தொகையுடன் பயிற்சி.! உடனே அப்ளை பண்ணுங்க.!

தமிழக மின்வாரிய துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி தமிழக மின் வாரியத் துறையில் டெக்னீசியன் அப்ரண்டீஸ் பணிகளுக்கு 500 காலியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த பயிற்சி பணிகளில் சேர்வதற்கான வயது வரம்பு அரசு விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி காலத்தில் உதவி ஊதியமாக ரூ.8000/- வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கட்டணங்கள் கிடையாது.

தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களது விண்ணப்பத்தினை மின்வாரிய துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு 20.02.2024 தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிறகு வரங்களை அறிய tangedco.org என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Next Post

அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல் பாதிப்பு!… தமிழ்நாட்டுக்கு புதிய எச்சரிக்கை!

Mon Feb 12 , 2024
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் வேகமாக பரவிவருவதால், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத்துறை செல்வ விநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் (Kyasanur Forest Disease) கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது. முன்னதாக, இதனால் குரங்குகள் (Monkey) மட்டும் பாதிக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில், இது மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸானது […]
தீவிரமாக பரவும் குரங்கு காய்ச்சல்..! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு..!

You May Like