ஆசிரியர் காலிப்பணியிடங்கள்..!! மொத்தம் 58,000..!! மத்திய அமைச்சர் முக்கிய தகவல்..!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரின் போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பேசினார். அவர் கூறுகையில், மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள் போன்றவைகளில் 58,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தார். இதில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 12,099 ஆசிரியர் பணியிடங்களும், 1312 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் மத்திய பல்கலைக்கழகங்களில் 6,180 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.15,798 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்தார்.

இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 1,050 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளது என்றும் ஐஐடி-களில் 4,423 ஆசிரியர் பணியிடங்களும், 5,052 ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

இருசக்கர வாகனத்தில் சிறுமியிடம் முகவரி கேட்பதை போல சிலுமிசம் செய்த இளைஞர்…..! கடைசியில் நடந்ததை பாருங்கள்….!

Tue Feb 7 , 2023
முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால், உடனடியாக பெண்களும் சரி, குழந்தைகளும் சரி உதவிக்காக மற்றவர்களை அழைப்பார்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் பாராட்டினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுபவர்களை மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியமாக […]

You May Like