
புனே : ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், ஸ்மார்போனை இடைநிறுத்தி வைக்க வித்தியாசமான முறையில் ஸ்டான்ட் செய்த ஆசிரியரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது.
கொரோனாவினால் ஏற்பட்ட ஊரடங்கினை தொடர்ந்து கல்வி நிலையங்கள்அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் புனேவைச்சேர்ந்த வேதியியல் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய ஸ்மார்போனை பயன்படுத்தி பாடம் நடத்திய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆம், ஆன்லைன் வகுப்புகளைப் பதிவு செய்வதற்காக தனது ஸ்மார்ட்போனை இடைநிறுத்த தன்னிடம் இருந்த அத்தியவாசிய பொருட்களான நாற்காலி மற்றும் துணி துண்டுகளைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக முக்காலி செய்துள்ளார் வேதியியில் ஆசிரியர் மௌமிதா. இவர், இதனைப்பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்த முறையினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது இது தான் என சமூக வலைத்தளங்கில் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகிறது.