அரசு பள்ளி ஆசிரியர்கள் மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும்.
இது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில்; பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு அல்லது நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்பச் சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு, துறை மாறுதலுக்குச் செல்லலாம்.
பள்ளிக்கல்வியிலிருந்து தொடக்கக் கல்வித் துறை, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்புத் துறை, ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் தடையின்மைச் சான்று பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

