துபாய் செல்லும் வழியில் தொழில்நுட்ப கோளாறு.. பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம்…

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது..

ஸ்பைஸ்ஜெட்டின் SG-11 என்ற விமானம் இன்று டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.. ஆனால் செல்லும் வழியிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து , அந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது..

எனினும் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவது இது முதன்முறையல்ல.. கடந்த 1 மாதத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது 3-வது முறையாகும். ஜூன் 19 அன்று, 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் டெல்லி நோக்கிச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.. இதே போல் கடந்த 2-ம் தேதி நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

18% வேகமாக பரவுமாம்.. மற்றொரு ஆபத்தான ஒமிக்ரான் மாறுபாடு.. அதிர்ச்சி தகவல்...

Tue Jul 5 , 2022
கொரோனாவின் கொடிய டெல்டா மாறுபாடு கடந்த ஆண்டு அழிவை ஏற்படுத்திய பிறகு, மற்றொரு ஆபத்தான ஒமிக்ரான் மாறுபாடு கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் வெளிவந்தது.. பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன், ஒமிக்ரான் மிகவும் பரவலாக உள்ளது.. மேலும் சமீபத்திய காலங்களில் பெரும்பாலான நிகழ்வுகள் இந்த மாறுபாடு காரணமாக ஏற்பட்டவை தான்.. ஒமிக்ரானின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை அமெரிக்காவில் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இந்தியா உட்பட […]

You May Like