புதிய ரக ஐபோன்கள், புதிய வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், புதிய ரக ஐபோன்களை சிஇஓ டிம் குக் அறிமுகப்படுத்தி வைத்தார். ஐபோன்-14 ரகத்தின் தொடக்க விலை ரூ.79,900 என்றும், ஐபோன் 14 பிளஸ்-ன் தொடக்க விலை ரூ.89,900 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன்-14 புரோ ரகத்தின் தொடக்க விலை ரூ.1,29,900 என்றும், ஐபோன் 14 புரோ மேக்ஸ்-ன் தொடக்க விலை ரூ.1,39,900 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரக செல்போன்கள் வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்கள் 8 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் வரும் 16ஆம் தேதி முதல் சந்தைக்கு வரவுள்ளதாகவும், இதன் விலை 29 ஆயிரத்து 900 ரூபாய் முதல் 45 ஆயிரத்து 900 ரூபாய் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பட்ஸ் சாதனத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் ஏர்பட்ஸ் ப்ரோ-2 என பெயரிடப்பட்டுள்ள இதன் ஆரம்ப விலை 26 ஆயிரத்து 900 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.