fbpx

புதிய கார் வாங்க திட்டமா? அப்படின்னா இந்த விலைய கொஞ்சம் பாத்துட்டு போங்க..!

நீங்கள் புதிதாக கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், காத்திருந்து வாங்குவது நல்லது.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் நிலையில், கார் விலையும் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ மொபைல் துறையில் வாகன தயாரிப்புக்கான உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால், அவ்வப்போது இதுபோல வாகனங்களின் விலையை உயர்வது வழக்கம். அந்த வகையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Tata Motors aims to build 80,000 electric vehicles in this year | இந்த  நிதியாண்டில் 80,000 மின்சார வாகனங்களை உருவாக்க இலக்கு வைத்துள்ள டாடா  நிறுவனம் – News18 Tamil

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கார்களின் விலை 0.55 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாகவும், இந்த விலை உயர்வு ஜூலை 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் நெக்சான், ஹேரியர், சஃபாரி உள்ளிட்ட பிரபலமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால், அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த மாதத் தொடக்கத்திலேயே வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உயர்த்தியிருந்தது.

டாடா நெக்சான் இவி மாடல் விலையில் திடீர் மாற்றம் | Tata Nexon EV Prices  Increased In India Cheapest Electric SUV Gets Dearer

கொரோனா பிரச்சனையைத் தொடர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்களுக்குக் கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வாகன உற்பத்தியும், விற்பனையும் பாதிக்கப்பட்டது. உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளதால், அதன் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் செமி கண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Chella

Next Post

அதிர்ச்சி..!! 9 நாட்களில் 8 பேரை காவு வாங்கிய ஜப்பானிய மூளைக்காய்ச்சல்..! திணறும் சுகாதாரத்துறை..!

Sun Jul 10 , 2022
அசாம் மாநிலத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 9 நாட்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் மற்றும் மலேரியே பரவி பலரது உயிரை பறிக்கிறது. குறிப்பாக, மழைக்கால வெள்ளப் பருவத்தில் வேகமாக பரவும் இந்த காய்ச்சல், மே மாதத்தில் தொடங்கி அக்டோர் மாதம் வரை நீடிக்கிறது. ஏற்கனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில், கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், […]

You May Like