’சிறுமியின் உள்ளாடையை கழற்ற சொல்வதும் கற்பழிப்புக்கு சமம் தான்’..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

சிறுமியின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்தியது பலாத்காரம் செய்ததற்கு சமம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

கொல்கத்தாவில் கடந்த 2007 மே மாதம் 7ஆம் தேதி சிறுமி ஒருவரை, ராபி ராய் என்பவர் தனியாக அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக சிறுமியின் உள்ளாடையை கழற்றி உள்ளார். உள்ளாடையை கழற்றிய பின்பு சிறுமி அலறத் தொடங்கியதால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டு, குற்றவாளியை போலீசிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கில் 2008 ஆம் ஆண்டு மேற்கு தினாஜ்பூரில் உள்ள கீழ் நீதிமன்றம் ராபி ராய்க்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபாராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்ப்பு ராபி ராய், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், பாதிக்கப்பட்ட சிறுமி மீது தனக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என்றும், சிறுமியின் மீது தனது தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தியதாக கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனன்யா பந்தோபாத்யாய், “பாதிக்கப்பட்ட சிறுமி தனது உள்ளாடைகளைத் திறக்க மறுத்ததால், அவர் அதை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார். இது கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சிக்கு சமம்” என்று கூறினார். இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி, கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது உறுதியானது.

Chella

Next Post

12ம் வகுப்பு மாணவியை தாயாக்கிய 11ம் வகுப்பு மாணவன்….! பெற்றோர் அதிர்ச்சி….!

Wed Feb 8 , 2023
90ஸ் கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் பள்ளி பருவத்திலும் சரி, கல்லூரி பருவத்திலும் சரி எதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்றார்களோ அந்த வேலையை மட்டும் தான் பார்த்தார்கள். 90ஸ் கிட்ஸை இன்றளவும் பார்த்தோமானால் சக பெண்களிடம் முதலில் எப்படி பேசுவது என்று தெரியாமல், தைரியம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் 2k கிட்ஸ்சை பொறுத்தவரையில் அவர்கள் அப்படியே இவர்களுக்கு எதிர்மறாக இருப்பார்கள். அந்த வகையில், சென்னை பெரவள்ளூரை சேர்ந்த 17 வயதான […]

You May Like