அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

சம்பள பிரச்சனை காரணமாக ஓனரின் மனைவியை கொடூரமாக கொலை செய்த ஊழியர்கள்…நாயால் கிடைத்த துப்பு….

தெலுங்கானாவில் சம்பளம் பிரச்சனை காரணமாக பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

telungana murder

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே உள்ள ஆர்யா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஸ்ரீனிவாஸ் – வரலட்சுமி. பில்டிங் கான்ட்ராக்டரான இவர், வேலைக்கு சென்று வீடு திரும்பியபோது வீட்டில் மனைவி வரலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கால் விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்து பதறிப்போன ஸ்ரீனிவாஸ் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்த விசாரணை நடத்தியதில், சந்தேகத்தின் பேரில் ஸ்ரீனிவாஸின் கம்பெனியில் வேலைபார்த்த கொத்தனார் பசுலேடி நாகராஜு (23), டிரைவர் நாகேஷ் குமார் (26) என்ற இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, போலீசார் அவர்கள் பாணியில், விசாரணை நடத்தியதில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஸ்ரீனிவாஸிடம் வேலை செய்துவந்த நாகராஜு மற்றும் நாகேஷ் இருவருக்கும் சில வருடங்களாகவே அவரிடம் சம்பளம் தொடர்பான பிரச்சனை இருந்துவந்துள்ளது. அதனால் இருவரும் ஸ்ரீனிவாஸைப் பழிவாங்குவதற்காக வரலட்சுமியைத் தாக்கிவிட்டு அவரிடம் இருக்கும் நகைகளைப் பறித்துச் செல்ல வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளனர்.

மேலும் கொலை செய்வதற்காக யூடியூப்பில் கொள்ளை அடிப்பது, கொலை செய்வது தொடர்பான தெலுங்கு டப்பிங் சினிமா ஒன்றையும் பார்த்துள்ளனர். அத்துடன் கொலை செய்துவிட்டு தப்பிப்பதற்கு வசதியாக அவர்கள் ஹோலி தினத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திட்டப்படி, சம்பவத்தன்று வரலட்சுமியைக் கொலை செய்துவிட்டு நகைகள், பணம் மற்றும் 2 செல்போன்களையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் காலில் இருந்த மெட்டியைக் கழற்ற முடியவில்லை என கால் விரல்களையும் துண்டாக்கியுள்ளனர்.

மேலும், போலீஸ் கவனத்தை திசை திருப்புவதற்காக மிளகாய்ப் பொடி, எலுமிச்சை பழம், பவுடர் உள்ளிட்டவற்றை வீடு முழுவதும் தூவிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பின்னர் இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக உடலைக் காண வந்துள்ளனர். இறுதியாக ஸ்ரீனிவாஸ் வீட்டில் வளர்த்துவரும் நாய் மூலமாகவே கொலையாளிகள் குறித்த துப்பு கிடைத்தது என போலீசார் கூறினர். சம்பவம் நடந்த அன்று வீட்டில் இருந்த நாய் குரைக்காததை வைத்து தெரிந்தவர்கள் யாரோ தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரித்ததில் இருவரும் சிக்கினார்கள்.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர்களிடம் இருந்தும் கத்தி, நகைகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் இருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

1newsnationuser2

Next Post

சிறுநீர் கழிக்க சென்ற நேரத்தில் பிஎம்டபிள்யூ கார் திருட்டு...

Mon Mar 16 , 2020
உத்தரபிரதேசத்தில் குடிபோதையில் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றபோது, 40 லட்சம் ரூபாய் காரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அரோரா என்பவர், பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திவிட்டு சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்க இறங்கி உள்ளார். அப்போது அவர் காரின் சாவியை எடுத்துச் செல்லாததால், அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரின் முதுகில் துப்பாக்கியை வைது மிரட்டி […]
uttarpradesh car theft

You May Like