டெண்டர் முறைகேடு..! எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

மாநகராட்சி டெண்டர்கள் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கில் எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதிமுக ஆட்சிகாலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை, வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. இதேபோல் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்த வழக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்திருந்தனர்.

டெண்டர் முறைகேடு..! எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில் சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு..!

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி சார்பில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு ஆஜரானார். அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து ஜூலை 18ஆம் தேதிக்குள் பதிலளிக்க அறப்போர் இயக்கம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எஸ்.பி.வேலுமணியின் கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

Chella

Next Post

பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பம்: கருவை கலைக்க கருணையுடன் அனுமதி அளித்த உயர் நீதிமன்றம்..!

Fri Jul 1 , 2022
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர், கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கருவுற்ற சிறுமி தான் ஏழ்மையில் சுழல்பவள் என்றும், ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வசதியாக இல்லை […]
தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமி..!! நடுரோட்டில் இளைஞர் செய்த மோசமான காரியம்..!!

You May Like