பயங்கர காட்டுத்தீ!… 46 பேர் பலி!… கரும்புகையால் சூழ்ந்த சிலி!… விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள சிலி, மத்திய சிலி பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆயிரத்தும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் தீயில் எரிந்தன. பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி 46 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானங்களின் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும், தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள், பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தில் சிக்கி மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

Paytm தடை!… ஒரே பான் எண்ணில் 1000க்கும் மேற்பட்டோர் வங்கி கணக்கை இணைத்ததே காரணம்!

Sun Feb 4 , 2024
வங்கியில் ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஒரே பான் எண்ணில் 1000க்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களது வங்கி கணக்கை இணைத்தே பேடிஎம்(Paytm) தடைக்கான காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் […]

You May Like