பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் சோதனை..!! சிக்கிய முக்கிய ஆவணங்கள் என்ன..? பரபரப்பு தகவல்

பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின் போது, அம்மாநிலத்தின் முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா: மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப் படத்தை கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 24ஆம் தேதி வெளியானது. இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று மத்திய அரசு நிராகரித்தது. மேலும் தவறான கருத்துக்கள் பரப்படுவதாக கூறி இந்த ஆவணப்படத்தை தடை செய்தது. மேலும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.

பிபிசி அலுவலகத்தில் 2-வது நாளாக தொடரும் சோதனை..!! சிக்கிய முக்கிய ஆவணங்கள் என்ன..? பரபரப்பு தகவல்

இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதலே அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த வருமான வரித்துறை சோதனைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

முன்னதாக, சோதனையின் போது அங்கு இருந்த பிபிசி செய்தியாளர்கள், ஊழியர்களின் செல்போன், லேப்டாப்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துக் கொண்டனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக, வருமானவரித் துறையிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை. பிபிசி நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

Chella

Next Post

3 மாநிலங்களில் அதிரடி சோதனை..!! சிக்கியது என்ன..? என்ஐஏ பரபரப்பு விளக்கம்..!!

Wed Feb 15 , 2023
கோவை கார் வெடிப்பு, மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 மாநிலங்களில் சோதனை நடைபெற்றது என என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது தற்போது நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து என்ஐஏ […]

You May Like