“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும்..” “பாசத்திற்குரிய தாய்மார்களுக்கும்..” – நெஞ்சார்ந்த நன்றி.! தளபதி விஜய் அறிக்கை.!

தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது அரசியல் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த அவர் ஜாதி மத பிளவுகள் இல்லாத சமத்துவ அரசியல் கொள்கைகளைக் கொண்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் விளங்கும் எனவும் தெரிவித்தார்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் என பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அவரது கட்சிக்கு எதிரான விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை முன்வைத்த போதும் பெரும்பாலானோர் விஜய் அரசியலுக்கு வருவதை ஆரோக்கியமான முடிவாக வரவேற்றனர்.

இந்நிலையில் தனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழக வெற்றி கழகம் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தளபதி விஜய். இந்த அறிக்கையில் ” தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் துவங்கி இருக்கும் இந்த அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள பெருமதிப்பிற்குரிய அரசியல் தலைவர்கள் அன்பிற்குரிய திரைத்துறை நண்பர்கள் பாசத்திற்குரிய பொதுமக்கள் ஊக்கமளிக்கும் ஊடகங்கள் மற்றும் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

ஜம்மு காஷ்மீர்: "முழங்கால் அளவு பனி.. 8 கிலோமீட்டர் தூரம்.. ".! கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற இந்திய ராணுவ வீரர்கள் செய்த அசாத்திய செயல்.!

Sun Feb 4 , 2024
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பனிப்பொழிவின் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். கடும் பனிப்பொழிவால் ஆபத்தான சில சாலைகளும் ராணுவத்தால் மூடப்பட்டிருக்கிறது. இதனால் மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைகளுக்கும் மக்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் குப்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் […]

You May Like