சிவாஜிக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்து பெருமை சேர்த்த நடிகை..!! யார் தெரியுமா..?

45 வருடங்களாக சினிமாவில் கலக்கிய நடிகை ஒருவர் தொடக்கத்தில் சிவாஜிக்கு மகளாகவும், பின் அதே சிவாஜிக்கு மனைவியாக நடித்து பெருமை சேர்த்துள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை காந்திமதி.

சிவாஜிக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்து பெருமை சேர்த்த நடிகை..!! யார் தெரியுமா..?

1966ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் காந்திமதியுடன் நாகேஷ், கே.ஆர். விஜயா உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். அதன்பின் இவர் 16 வயதிலேயே, சின்னத்தம்பி பெரியதம்பி, கரகாட்டக்காரன், முத்து, மாணிக்கம், அகல்விளக்கு, வால்டர் வெற்றிவேல் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி குணச்சத்திர நடிகையாக வலம் வந்தார். இதுவரை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி மெகா தொடர்களில் நடித்துள்ளார். இயல்பான முகம் இயல்பான நடிப்பு, கம்பீரமான குரல் இதனை வைத்து காந்திமதியை அடையாளம் கொள்ளலாம்.

சிவாஜிக்கு மகளாகவும், மனைவியாகவும் நடித்து பெருமை சேர்த்த நடிகை..!! யார் தெரியுமா..?

அன்று முதல் இன்று வரை உள்ள இளைஞர்கள் வரை இவரை அனைவருக்கும் தெரியும். இவர் இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார். இவர் சினிமாவில் கொண்ட ஆர்வத்தாலே கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே நடிப்பின் அதிக கவனம் செலுத்தினார். இருப்பினும் தீனதயாளன் என்பவரை தத்தெடுத்து வளர்த்தார். மேலும், சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இந்திய பொதுவுடமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு மேடைகளில் பாடியும், புரட்சிகர நாடகங்களில் நடித்து வந்தார். அதன்பின் சில காலமாக காந்திமதிக்கு உடல்நிலை பிரச்சனை ஏற்பட்டு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர் தன்னுடைய 65-வது வயதில் காலமானார். இருப்பினும் இன்று வரை நடிகை காந்திமதி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கிறார்.

Chella

Next Post

தமிழகத்தை ஆக்கிரமிக்கின்றதா கேரளா? தலைவர்கள் பரபரப்பு கோரிக்கை…

Thu Nov 10 , 2022
கேரள அரசு எல்லைப்பகுதியை அளவிடுவதாகக் கூறி தமிழக எல்லையை ஆக்கிரமிப்பதாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ’’ தமிழகம்-கேரள எல்லைகளை மறு அளவீடு செய்வதாக தன்னிச்சையாக கேரள அரசு செயல்பட்டு தமிழக மக்களின் நிலங்களை தங்களின் வருவாய் நிலங்கள் ஆக்கிரமித்து வருவது கண்டிக்கத்தக்கது. பல லட்சம் ஏக்கர் நிலங்களை கேரள கம்யூனிஸ்ட் அரசு அத்துமீறி முயற்சிசெய்துவரும் நிலையில் இதை தமிழக […]

You May Like