கள்ளக் காதலியின் தந்தையை போட்டு தள்ளிய ஆட்டோ டிரைவர்….!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நிர்மல் நித்யா, இவரது‌கணவர்‌ சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த நிர்மல் நித்யா உடன் அவரது தந்தை அருள்நாதன் தங்கி வந்துள்ளார்.இந்த நிலையில, நிர்மல் நித்யாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சந்திரசேகர் என்பருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், ஒரு மாதமாக நிர்மல் நித்யா, சந்திரசேகருடன் இருந்த தொடர்பை கைவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர், தன்னுடன் பழகிய போது வாங்கிய பணம் மற்றும் பொருட்களை திருப்பித் தருமாறு நிர்மல் நித்யாவுடன் தகராறு செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் இதுதொடர்பாக நிர்மல் நித்யாவின் வீட்டிற்கு சென்று தகாறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நிர்மல் நித்யாவின் தந்தை அருள்நேசன், தனது மகளிடம் அடிக்கடி தகராறு செய்ததால் உருட்டு கட்டையால் தாக்க முயன்றுள்ளார்.

அப்போது, ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சந்திரசேகர், அவரிடம் இருந்த கட்டையை பிடிங்கி அருள்நாதனை சரமாரியாக அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருள்நேசன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சின்னாளப்பட்டி காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சந்திர சேகரை கைது செய்தனர்.

Baskar

Next Post

நாட்டிலேயே மிகவும் பலவீனமான, திறமையற்ற பிரதமர் என்றால் அது மோடி தான்... தெலங்கானா முதல்வர் விமர்சனம்..

Mon Jul 11 , 2022
நாட்டிலேயே மிகவும் பலவீனமான மற்றும் திறமையற்ற பிரதமர் என்று பிரதமர் மோடியை தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.. தெலங்கானாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திர சேகர ராவ் மத்திய அரசையும், மோடியையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.. மேலும் 1970களில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் அளவுக்கு தைரியமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அதேசமயம் மோடியின் ஆட்சியில் நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.. பாஜக தலைமையிலான […]

You May Like