மக்களே.. இன்று மின்தடை கிடையாது…! உத்தரவை ரத்து செய்து அறிவிப்பு…!

சென்னையில் செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் இன்று மின்தடை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் மின்தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செம்பரம்பாக்கம், பொன்னேரி பகுதிகளில் கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

செம்பரம்பாக்கத்தில் பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம் பகுதிகளிலும், பொன்னேரியில் இருளிபட்டு, அழிஞ்சிவாக்கம், ஜகநாதபுரம், பெரியபாளையம் ரோடு, விருந்தவன் நகர், குதிரபல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல திருப்பூரில் இன்று நடைபெற இருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்விநியோகம் தடைபடாது என தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெரும் பரபரப்பு...! பாக்கிஸ்தானில் காவல்துறை அலுவலகத்தை தாக்கிய தீவிரவாதிகள்...!

Sat Feb 18 , 2023
பாக்கிஸ்தானில் காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தை அடையாளம் தெரியாத கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கராச்சி காவல்துறைத் தலைவரின் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு மத்தியில் பாதுகாப்புப் படையினர் மீதான சமீபத்திய தாக்குதல் வெட்கக்கேடானது என எதிர் கட்சிகள் […]

You May Like