திருமண நாளில் மணமகள் கட்டாயம் அழ வேண்டும்.. வினோத பாரம்பரியம்.. எந்த நாட்டில் தெரியுமா..?

இந்திய திருமண சடங்குகள் மிகவும் தனித்துவமானவை. பல்வேறு திருமண சடங்குகள் பழக்கவழங்கங்க்கள் நாட்டில் பின்பற்றப்படுகின்றன.. திருமண விழாக்களில் நடத்தப்படும் பல சடங்குகளில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மறுபுறம், தங்கள் மகள் தங்களை விட்டு பிரியப்போகிறாள் என்று பெற்றோர் கண்ணீர் சிந்துவார்கள்.. மேலும் மணப்பெண்களும், தங்கள் பெற்றோரை விட்டு பிரிய போகிறோம் என்ற உணர்ச்சி பெருக்கில் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், திருமண நாளன்று மணப்பெண்கள் கட்டாயம் அழும் நிலை உலகில் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம்.. தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் திருமணத்தின் போது, மணமகள் கட்டாயம் அழ வேண்டும் என்ற பழக்கம் உள்ளது.. இந்த சடங்கு முன்பு போல் பிரபலமாக இல்லாவிட்டாலும், இந்த வழக்கம் இன்னும் பல இடங்களில் உள்ள மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.. குறிப்பாக துஜியா மக்கள், இது ஒரு அவசியமான திருமண முறையாகக் கருதுகின்றனர். மாகாணத்தின் பல்வேறு இடங்களில் இதே நிலைதான். ஒவ்வொரு மணமகளும் திருமணத்தில் அழ வேண்டும். இல்லையெனில், மோசமாக வளர்க்கப்பட்ட பெண்ணாக அவள் கருதப்படுவாள்..

இந்தப் பழங்குடியினர் சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பாரம்பரியம் கிமு 475 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.. அந்த மாகாணத்தின் இளவரசி, தனது திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு செல்லும் போது அழுதாரம்.. அப்போது முதல், திருமணத்தில் மணமகள் கட்டாயம் அழ வேண்டும் என்ற பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகிறது..

இந்த பாரம்பரியத்தின் படி, திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, மணமகள் தினமும் ஒரு மணி நேரம் அழ வேண்டும்.. இந்த பாரம்பரியத்தில், 10 நாட்களுக்குப் பிறகு, பெண்ணின் தாயும் சேர்ந்து அழ வேண்டும்.. படிப்படியாக மற்ற உறவினர்களும் பெண்ணுடன் சேர்ந்து அழ வேண்டும்.. இதுமட்டுமின்றி, திருமணத்தின் போது அழும் திருமணம் என்ற பாடலும் ஒலிக்கப்படுகிறது.

திருமணத்தன்று ஒரு பெண் அழவில்லை என்றால், அவளுக்கு சில கெட்ட சகுனம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.. எனவே பெண்கள் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அழத் தொடங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் கூட, மணமகள் அழவில்லை என்றால், அவளுடைய பெற்றோர் அவளை அடித்து அழ வைப்பார்களாம்..

Maha

Next Post

விவசாயிகள் கவனத்திற்கு...! இதற்கான தொகை வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்...!

Sat Feb 18 , 2023
தமிழகம்‌ முழுவதும்‌ 2,498 நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ மூலம்‌ தமிழகம்‌ முழுவதும்‌ 2,498 நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ திறக்கப்பட்டு, விவசாய பெருமக்களிடமிருந்து நேரடியாக நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 16 இலட்சம்‌ மெ.டன்‌ அளவிற்கு நடப்பு கொள்முதல்‌ பருவத்தில்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ […]

You May Like