பின்பக்கமாக வீட்டிற்குள் வந்த இளைஞர் செய்த கொடூரச் செயல்… அதிர்ச்சியில் உறைந்த பெண்…!

திருச்சி பொன்மலை மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் வசித்து வருபவர் முகமது சையது. இவரது மனைவி சகிலா பேகம். முகமது சையது ஒரு பிரபல துணி கடையில் வேலை செய்து வருகிறார்.   இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் 16 வயதான மூத்த மகள், காட்டூர் பாப்பா குறிச்சியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த  ஜோசப் ராஜ் என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதுபற்றி  சகிலா பேகத்திடம் பேசியுள்ளார். ஆனால் சகிலா பேகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் ராஜ், வீட்டின் பின்பக்க கதவு வழியாக முகமூடி அணிந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பிறகு சகிலா பேகத்தின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரின் தலை மற்றும் முகத்தை வெட்டியுள்ளார் பிறகு அங்கிருந்து தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கிய  சகிலா பேகத்தை பக்கத்தில் உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொன்மலை காவல்துறையினர், தப்பியோடிய இளைஞர் ஜோசப் ராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Baskar

Next Post

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும்.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

Sat Jul 16 , 2022
நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு […]

You May Like