சொத்து கொடுக்காத தந்தைக்கு நேர்ந்த கொடூரம்… மகனின் வெறிச்செயல் செயல்..!

ராஜஸ்தானில் தந்தையைக் கொன்று வயலில் வீசிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தில் கெர்கெடா கிராமத்தில் வசித்து வரும் கன்ஹயலால் (70) என்பவர் கடந்த ஜூன் 30-ந்தேதி அவருடைய குடிசைக்கு அருகிலிருந்த வயலில் சடலமாக கிடந்தார்.

விசாரணையில் அவரது மகன் ஹேம்ராஜ் (35), தனது தந்தையை கோடரியால் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விசாரணையில், இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதும், தனியாக குடிசை அமைத்து வசித்து வந்துள்ளார், மேலும் அவர் சட்டவிரோதமாக நாட்டு மதுபானம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. குடும்பத்துக்கு அவமானம் ஏற்படுத்தும் தந்தையின் இந்த செயல்கள் ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை.

மேலும், கன்ஹயலால் தனக்கு சொந்தமான நிலத்தை தன்னுடைய மூத்த மகனுக்கு கொடுக்க விரும்பினார். இது ஹேம்ராஜூக்கு பிடிக்கவில்லை. மேலும் கிராமத்தில் உள்ளவர்கள் சிலர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மரணத்திற்கு கன்ஹயலால் தான் காரணம் என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். இதையடுத்து ஹேம்ராஜ் தனது தந்தையை கொலை செய்து, அந்த கொலை பழியை இதற்கு முன்பு அவரை மிரட்டிய கிராமவாசிகள் மீது போடுவதற்கும் சரியான வாய்ப்பாக கருதி அவரை கொலை செய்துள்ளார். என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Baskar

Next Post

கள்ளக் காதலியின் தந்தையை போட்டு தள்ளிய ஆட்டோ டிரைவர்....!

Mon Jul 11 , 2022
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த என்.பஞ்சம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் நிர்மல் நித்யா, இவரது‌கணவர்‌ சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுடன் தனியே வசித்து வந்த நிர்மல் நித்யா உடன் அவரது தந்தை அருள்நாதன் தங்கி வந்துள்ளார்.இந்த நிலையில, நிர்மல் நித்யாவுக்கு, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சந்திரசேகர் என்பருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த நிலையில், ஒரு மாதமாக நிர்மல் நித்யா, சந்திரசேகருடன் […]

You May Like