29-ம் தேதி முதல் தமிழகத்தில் பருவமழை…! இந்த மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை…!

தமிழகத்தில் நாளை மறுநாள் பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் உள்பட புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 30-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்பட புதுச்சேரி பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Vignesh

Next Post

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு..!! ’இந்த தேதியில் வங்கிக்கு யாரும் செல்லாதீங்க’..!! அதிர்ச்சி..!!

Thu Oct 27 , 2022
நவம்பர் 19ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளன. நாட்டில் தற்போது உள்ள பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கொள்கை, ஓய்வூதியம் மற்றும் வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் பணி போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 19ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் […]

You May Like