பணியின் போது உயிரிழந்தவருக்கு ரூ.2 லட்சம் …! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

மதுரை மாவட்டத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மதுரை நகரில், குழாய் பதிக்கும் பணியில் மூன்று பணியாளர்கள் ஈடுபட்டிருந்தபோது அதே இடத்தின் வழியாக செல்லும் குடிநீர் குழாய் வெடித்ததால் அவர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த இடம் நிலத்தில் புதைந்துள்ளது. இச்சம்பவத்தில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் (வயது 30) என்பவர் பள்ளத்தில் சிக்கிக்கொண்டார்.

தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், மூன்று மணி நேர மீட்புப் பணிக்குப் பிறகு அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தியினைக் கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

புடலங்காயில் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? அறிந்துகொள்ளுங்கள்!!

Wed Nov 9 , 2022
புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது.   புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், […]

You May Like