சாலைகளில் பள்ளம்… அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிரடி உத்தரவு…!

பருவமழையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளால் பொதுமக்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் தடுப்புகள், அடையாளப் பலகைகள் வைக்க தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார் ‌‌.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில்; பருவமழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில இடங்களில்‌ பள்ளங்கள்‌ தோண்டப்பட்டு, வேலைகள்‌ முடிவு பெறாமல்‌ உள்ள நிலையில்‌ பள்ளங்கள்‌ மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில்‌ உள்ளது.

எனவே, மழைநீர்‌ வடிகால்‌ பணிகள்‌ மற்றும்‌ வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும்‌ மற்றும்‌ குழிகளும்‌ மூடப்படாமல் இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள்‌ மற்றும்‌ அடையாள பலகைகள்‌ வைக்க வேண்டும்.

மேலும்‌ சாலைகளில்‌ மழைநீர்‌ வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள Manual Cover திறந்‌திருப்பின்‌, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும்‌ ஏற்படாவண்ணம்‌ தடுப்புகள்‌, அடையாள பலகைகள்‌ ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்களுக்கும்‌, தொடர்புடைய துறைத்‌ தலைவர்களுக்கும்‌ அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

மக்களே உஷார்...! இந்த 18 மாவட்டத்தில் இன்று மட்டும் கனமழை...! வானிலை மையம் தகவல்...!

Wed Oct 26 , 2022
தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கடலோர […]

You May Like