அதிரடி…! ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய கூடாது…! பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவு…!

உபரி ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள தொடக்க நடுநிலை மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணிபுரிய செய்யும் நடைமுறை பல்லாண்டுகளாக அரசு வகுத்துள்ள விதிகளின்படி வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற நடைமுறை குறித்து வழக்கு ஒன்றில்., அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை தற்காலிகமாக அரசு பள்ளிகளில் பணி புரிய பணிக்கப்படும் நடைமுறையை வரவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் கல்வி ஆண்டில் இடையில் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டாம் என்று கருத்து தெரிவித்தது.

அதன் அடிப்படையில் முதன்மை கல்வி அலுவலர்கள் உபரியா ஆசிரியர்களாக கண்டறியப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை இந்த கல்வியாண்டில் Deployment செய்ய வேண்டாம் என்றும், அடுத்த கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரிமாறு ஆணை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக தொடக்கக்கல்வி இயக்குனர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழக மக்களுக்கு குட்நியூஸ்!... இனி ரேஷன் கார்டே தேவையில்லை!... புதிய திட்டம் அறிவிப்பு!

Sun Feb 12 , 2023
தமிழகம் முழுவதும் பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் நியாய விலைப் பொருட்களை மக்கள் வாங்கி செல்லும் வகையில் புதிய திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். […]

You May Like