“எங்களுடைய கரண்ட் பில் ரூ. 70 ஆயிரம் வந்துள்ளது. இதனை எங்களால் கட்ட முடியும். சாதாரண மக்களுக்கு எப்படி சாத்தியம்” என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் பிரசன்னா.

நடிகர் பிரசன்னா அளித்துள்ள பேட்டியில், “இந்த மாதம் மட்டுமே எனது தந்தை, மாமனார் மற்றும் எங்கள் வீட்டிற்கு சேர்த்து ரூ.70 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தை விட பல மடங்கு அதிகம். இத்தகைய கட்டண உயர்வு சாதாரண மக்களால் எப்படி சமாளிக்க முடியும். இதனை தவணை முறையில் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் அல்லது மாற்று வழி வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள மின்சார வாரியம், பிரசன்னா அவர்களின் மின்சார கணக்கு எண் மீண்டும் சரிபார்க்கப்பட்டு கணக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளது.