கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது!… எவ்வளவு தெரியுமா!

வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.12.5 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சமையல் கேஸ் சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. வர்த்தக கேஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலை நிலவரம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படும்.

அந்தவகையில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.12.5 உயர்ந்து ரூ.1,937க்கு விற்பனையாகவுள்ளது. சென்னையில் நேற்றுவரை ரூ.1924.50 என்று விற்பனை செய்யப்பட்டு வந்த வர்த்தக சிலிண்டர்கள் இன்றுமுதல் ரூ.1,937க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. அதேவேளை வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதாவது வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.918.50க்கு விற்பனை ஆகிறது

1newsnationuser3

Next Post

ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதல் டெண்டர் செல்லும்!… உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Thu Feb 1 , 2024
ஸ்மார்ட் மீட்டர்’ கொள்முதலுக்காக, மின் வாரியம் பிறப்பித்த டெண்டர் செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மின் பயனாளிகளின் வீடுகளில் பொருத்துவதற்காக ஸ்மார்ட் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் டான்ஜெட்கோ (தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்) டெண்டர் கோரியது. டெண்டர் ஆவணங்களில், தொழில்நுட்ப டெண்டர் மற்றும் நிதி டெண்டர் ஆகிய […]

You May Like