“இந்தியாவின் கருப்பு நாள்” – முன்னாள் முதல்வர் பரபரப்பு பேட்டி.!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.நில மோசடி மற்றும் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை ஆகியவை தொடர்பான வழக்குகளில் அமலாக்கத்துறை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய அவர் பதவியை ராஜினாமா செய்தார்

இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் தலைமையில் ஆட்சி அமைக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆளுநரிடம் அனுமதி கூறியது. இதனைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 எம்எல்ஏ-க்கள் தேவைப்பட்ட நிலையில் 47 எம்எல்ஏ-க்கள் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். முன்னாள் முதல்வரும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தனது கைது பற்றி பேசிய ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் பணம் வாங்கியது குறித்து நிரூபித்தால் அரசியலை விட்டு விலகவும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கைது விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31ம் தேதி இந்தியாவின் கருப்பு நாள் எனவும் தெரிவித்தார்.

Next Post

மணமகனுக்கு 'அல்வா' கொடுத்த மணமகள்.! பியூட்டி பார்லரில் இருந்து காதலனுடன் ஓட்டம்.!

Mon Feb 5 , 2024
உத்திரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர், தனது திருமணத்திற்காக ஒப்பனை செய்ய பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை அறியாது அப்பாவியாய் ஊர்வலம் சென்று கொண்டிருந்த மணமகன், உண்மையை அறிந்து, தனது உறவினர்களுடன் மனமுடைந்து வீடு திரும்பினார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரின் சௌபேபூர் கிராமத்தில், திருமண ஏற்பாடுகள் விமரிசையாக நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது மணமகன் தனது உறவினர்களோடு ஊர்வலமாக சென்று […]

You May Like