ஈரோடு இடைத்தேர்தல்…..! திமுகவின் 10 பணிமனைகளுக்கு சீல் வைத்த தேர்தல் ஆணையத்தால் பரபரப்பு……!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுகவின் 21 மாத கால ஆட்சியை பொறுப்புக்கு மதிப்பெண் வழங்கும் தகுதி இருப்பதால் இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று திமுக முயற்சித்து வருகிறது.அதேபோல அதிமுக கொங்கு மண்டலம் தன்னுடைய கோட்டை என நிரூபிப்பதற்கு தீவிர முயற்சியுடன் களமிறங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூத்த தலைவரை ஈவிகேஸ் இளங்கோவன் போட்டியிடுகின்றார். அதிமுக சார்பாக தென்னரசு போட்டியிடுகின்றார். இந்த சூழ்நிலையில் இந்த தேர்தல் திமுக ஆட்சி அமைத்து சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் திமுகவின் அமைச்சர்கள் 30க்கும் மேற்பட்டோரும் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த தேர்தல் திமுகவின் இந்த 21 மாத கால ஆட்சிக்கு பொதுமக்கள் வழங்கும் நற்சான்றிதழ் இன்று தீவிரமாக களத்தில் பேசப்பட்டு வருகிறது.

அதிமுகவை பொறுத்தவரையில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக, ஏற்பட்டிருந்த பிளவுகளால் வாக்குகள் இதுவரையில் சிதறி கிடந்தது. ஆனால் இந்த தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடாததால் அதிமுகவின் வாக்குகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதோடு கொங்கு மண்டலம் தங்களுடைய கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் என்று 100க்கும் அதிகமானோர் அதிமுகவின் சார்பாக களமிறங்கி இருக்கிறார்கள். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்குகளை கவர்வதற்கு 5️ நாட்கள் தீவிர பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டிருக்கிறார். திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 2️ நாட்கள் அந்த தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

இப்படி பரபரப்பாக ஒரு புறம் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தெரிவித்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கள்ளுக்கடை ராஜாஜி வீதியில் செயல்பட்டு வந்த திமுகவின் தேர்தல் பணிமனை உள்ளிட்ட 10 பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்திருக்கிறார்கள் அதேபோல அதிமுகவின் நான்கு பணிமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் மற்ற நாம் தமிழர் கட்சி தேமுதிக போன்ற பல்வேறு கட்சிகளின் பணிமனைகளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு தப்பவில்லை.

Next Post

கொழுந்தனார் கொடுத்த டார்ச்சர்..!! ஆற்றங்கரைக்கு அழைத்த அண்ணி..!! அடித்தே கொன்ற ’ரக்கர்ட் பாய்ஸ்’..!!

Thu Feb 16 , 2023
பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனாரை ஆண் நண்பர்கள் உதவியுடன் கொடூரமாக கொலை செய்த பெண்ணை, கிராம மக்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். தெலங்கானா மாநிலம் சிக்னல் தாண்டா கிராமத்தில் பெண் ஒருவர், தனது கணவரை இழந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கணவரை இழந்த நிலையில் அப்பெண்ணுக்கு வேறு சிலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. கள்ளக் காதலனுடன் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் அக்கிராமத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். […]

You May Like