Warning: unlink(/tmp/wordpress-seo.22.4.zip): No such file or directory in /home/u857151793/domains/1newsnation.com/public_html/wp-admin/includes/class-wp-upgrader.php on line 385
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி..! என்ன காரணம்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..! - 1NewsNation

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி..! என்ன காரணம்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைய என்ன காரணம் என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரைப்போல இந்த தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி..! என்ன காரணம்? நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!

அதில் அவர் கூறுகையில், “ரஷ்யா – உக்ரைன் போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக நிதி நிலைமைகள் இறுக்கம் போன்ற உலகளாவிய காரணிகள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைய முக்கியக் காரணம். பிரிட்டிஷ் பவுண்ட், ஜப்பானிய யென் மற்றும் யூரோ போன்ற நாணயங்கள் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயை விட பலவீனம் அடைந்துள்ளன. எனவே, 2022-இல் இந்த நாணயங்களுக்கு எதிராக இந்திய ரூபாய் வலிமையாக இருக்கிறது என தெரிவித்தார்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்..! கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைப்பு..!

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மிக தீவிரமடைந்து வன்முறையாக மாறியது. இதில், போராட்டக்காரர்கள் பள்ளியின் பேருந்தை […]
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்..! கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைப்பு..!

You May Like