சிறுவன் அழுததால் பின்வாங்கிய குடும்பம்… பாலம் விபத்தில் சிக்காமல் தப்பித்தனர்…!!

குஜராத்தில் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டபோது சிறுவன் அழுத காரணத்தில் ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் பின்வாங்கியதால் மொத்த குடும்பமும் உயிர் தப்பியுளள்ளது.

குஜராத் மோர்பி பகுதியை சேர்ந்தவர் மேத்தா, சாகர்பாய் இவர்கள் தனது குடும்பத்தினரான பானுபாய், கோமல், கெவ்னா ஆகியோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோர்பி பாலத்திற்கு சுற்றிப் பார்க்க செல்ல முடிவெடுத்தனர். அப்போது அவர்களுடன் நேத்ரா என்ற 9 வயது சிறுவன் மற்றும் 5 வயதிற்குள்பட்ட குழந்தை ஆகியோரை அழைத்து வந்திருந்தனர். டிக்கெட் வாங்கி விட்டு உள்ளே சென்றனர்.

பாலத்தின் மீது நடக்கத் தொடங்கியபோது சிறுவன் நடக்காமல் பாலம் ஆடியதால் அழத்தொடங்கியது. சமாளிக்க முடியாத காரணத்தால் அனைவரும் திரும்பிச் சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்று செல்பி எடுத்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் வீட்டைஅடைந்த 15 நிமிடங்களிலேயே விபத்து நடந்ததாக செய்திகள் வரத் தொடங்கியது. இதனால் அனைவரும்அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி சாகர் கூறுகையில், ’’ செல்ஃபி எடுத்து பாலத்தை விட்டு நாங்கள் கிளம்பிவிட்டோம். வீட்டுக்கு வந்த 15 நிமிடங்களில் செய்திகள் வந்தது. ஒரு வேளை சிறுவன் அழுது அடம்பிடிக்காமல் இருந்திருந்தால் நாங்களும் அந்த விபத்தில் சிக்கி இருப்போம்’’… என கூறி சமூக வலைத்தலங்களில் பதிவிட்டுள்ளனர் வெளியிட்டுள்ளனர்.

Next Post

திருமணமாகி ஆறே மாதத்தில் மோர்பி விபத்தில் உயிரிழந்த ஜோடி!!

Thu Nov 3 , 2022
திருமணம் ஆகி ஆறே மாதத்தில் இளம் ஜோடியும் மோர்பி விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் மோர்பி தொங்கும் பாலம் கடந்த ஞாயிறு அன்று மாலை 6.30 மணி அளவில் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 500 பேர் சிக்கிக் கொண்டனர். 141 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் இருந்து மோர்பி சென்ற இளம் ஜோடியும் உயிரிழந்தனர். பெங்களூருவில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வந்தவர்கள் ஹர்ஷ் […]

You May Like