ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

தந்தையுடன் மகிழ்ச்சியாக சென்ற சிறுமிகள்… கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூரம்…

கோவில்பட்டியில் குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், தந்தையே தனது 2 மகள்களையும், கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

childrens murder

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் ரோடு தாமஸ் நகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் டேவி குமார் (வயது 36). இவருடைய மனைவி மகாலட்சுமி (32). இவர்களுக்கு ஷைனி ஜெயசத்யா (11), ஜெசிகா ராணி (9) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

டேவி குமார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை பதிவு செய்து கொடுக்கும் தரகராக பணி புரிந்து வரும் நிலையில், டேவி குமாருக்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த முடியாமல், கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார்.

crime

இதனால், கடனை திருப்பி கொடுக்க முடியாமல், செய்வதறியாது மனமுடைந்துள்ளார். இதற்கிடையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், ஷைனி ஜெயசத்யா, ஜெசிகா ராணி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.

தனது மகள்களுடன் சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்த நிலையில், நேற்று காலை டேவி குமார் தன்னுடைய 2 மகள்களையும் அழைத்து கொண்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் சந்தோஷமாக இருவரும் தந்தையுடன் புறப்பட்டு சென்றனர்.

children murder 1

ஊரடங்கு உத்தரவால், மெயின் ரோட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், அங்குள்ள ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக மாற்றுப்பாதையில், கோவில்பட்டி வேலாயுதபுரம்-சாத்தூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு டேவி குமார் 2 மகள்களையும் அழைத்து சென்றுள்ளார். உற்சாகமாக தோட்டத்தில் குளிக்க சென்ற குழந்தைகளை மனதை கல்லாக்கி தன்னுடைய 2 மகள்களையும் அங்குள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, அவரும், அந்த கிணற்றில் குதித்துள்ளார்.

தண்ணீரில் தத்தளித்த இரு குழந்தைகளும் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். இதனால் மனமாறி, டேவிகுமார் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது அதற்குள், தண்ணீரில் மூழ்கி 2 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவர் மட்டும் கிணற்றில் தொங்கிய கயிறை பிடித்து மேலே ஏறிவந்துவிட்டார். இதனால், பதட்டமாக தனது நண்பர் ஒருவருக்கு சொல்போனில் தகவலை கூறிவிட்டு, அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கிவிட்டார்.

இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு இன்ஸ்பெக்டர் சுதேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மேலும், கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணிகளை கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஷைனி ஜெயசத்யாவின் உடலையும், ஜெசிகா ராணியின் உடலையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 2 மகள்களின் உடல்களைப் பார்த்து தாயார், உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து, தலைமறைவான டேவி குமாரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர், தோட்டிலோவன்பட்டி காட்டு பகுதியில் பதுங்கி இருந்த டேவிகுமார் இலுப்பையூரணி கிராம நிர்வாக அதிகாரி அமர்ராஜிடம் சரணடைந்துள்ளார். இதை தொடர்ந்து அவரை கிழக்கு போலீசாரிடம் கிராம நிர்வாக அதிகாரி ஒப்படைத்தார். அதன்பின், அவரை கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கடன் தொல்லையால், தனது 2 மகள்களையே கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1newsnationuser2

Next Post

கேரளாவில் ஆதரவற்றோர் மற்றும் நலிவுற்றோருக்காக சமையலறை கூடம் அமைக்க முடிவு – முதல்வர் பினராயி விஜயன்

Fri Mar 27 , 2020
திருவனந்தபுரம் : கொரோனா பாதிப்பினால் கேரள மாநிலம் முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் உணவு கிடைக்காதவர்களுக்காக  மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சமூக சமையல் அறை அமைக்க இடம் தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.   கேரளாவில் கொரோனா சிகிச்சைக்காக 879 தனியார் மருத்துவமனைகளில் உள்ள 69 ஆயிரத்து 434 படுக்கைகளும், 5607 அவசர சிகிச்சை பிரிவுகளும், 716 விடுதிகளில் உள்ள 15 ஆயிரத்து 333 அறைகளும் பயன்படுத்த […]
kerala goverment

You May Like