முக்கிய அறிவிப்பு…! இன்று காலை 10 மணி முதல் இலவச பயிற்சி வகுப்பு ஆரம்பம்…! மிஸ் பண்ணிடாதீங்க…!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 4 அடங்கிய பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பபட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு சேலம், ஏற்காடு சாலை, கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று காலை 10 மணி அளவில் துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

தற்போது நடத்தப்படவுள்ள குரூப் 4 அடங்கிய பணிகளுக்காக இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள தகுதியும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்பு குறித்தான விவரங்களைப் பெற அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Vignesh

Next Post

இந்திய தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 14-ம் தேதியுடன் நிறைவு...! இன்று டெல்லியில் முக்கிய கூட்டம்...!

Wed Feb 7 , 2024
இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியுடன் […]
விரைவில் வருகிறது ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்..!! எதற்காக..? யாருக்காக தெரியுமா..?

You May Like