மனைவியை சந்திக்க வீட்டிற்கு வந்த கள்ளக்காதலனை.. போட்டு தள்ளிய கணவன்…!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சொக்ககிழவன்பட்டியை வசித்து வருபவர் ஆண்டிக்காளை (40). டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நெவ்வாயி. சிங்கம்புணரி கோட்டை வேங்கை பட்டியில் வசித்து வரும் இளையராஜாவுக்கும்(39), ஆண்டிக்காளையின் மனைவி நெவ்வாயிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இந்தநிலையில் ஆண்டிக்காளையின் வீட்டில் நெவ்வாயியை ரகசியமாக இளையராஜா நேற்று காலை சந்தித்துள்ளார். அப்போது அதை பார்த்து ஆத்திரம் அடைந்த ஆண்டிக்காளை, அரிவாளால் இளையராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த இளையராஜா அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சார்லஸ், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து சென்று இளையராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை சம்பவம் குறித்து கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆண்டிக்காளையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதலனை தன் வீட்டிலேயே வைத்து வெட்டிக்கொன்ற சம்பவம அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்..! டிக்கெட் விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?

Tue Jul 12 , 2022
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஒலிம்பியாட் தொடரை பொறுத்தவரை, போட்டிகள் இரண்டு அரங்குகளில் நடைபெறவுள்ளன. ஒரு அரங்கில் ஒரே நேரத்தில் 50 […]
44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா..! பிரம்மாண்ட நிகழ்வுகளை வெளியிட ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு..!

You May Like