மக்களவைத் தேர்தலுக்கு பின் சம்பவம்..!! குக்கிராமங்களுக்கு கூட தெரிந்திருக்க வேண்டும்..!! நடிகர் விஜய் உத்தரவு..!!

குக்கிராமத்தில் உள்ள 80 வயதானவர்களுக்கு நம் கட்சியின் பெயர் தெரிய வேண்டும் என தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பின் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிப் பெயரை அறிவித்த பின்பு அவர்தான் கடந்த சில தினங்களாகப் பேசுபொருளாகி மாறியிருக்கிறார். 2024 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமே களம் இறங்கப் போவதாகவும் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார் விஜய். மேலும், அரசியலில் முழுநேரமாக இறங்கப் போவதால் சினிமாவை விட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கட்சி அறிவித்தப் பின்பு தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் பனையூரில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளாவிலும் தனது கட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்திலும் அம்மாநிலத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தினை புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்துள்ளார். கூட்டத்தில் நடிகர் விஜய் நேரிடையாக பங்கேற்காமல் வீடியோ கால் மூலமாக 5 நிமிடங்கள் கலந்துரையாடி உள்ளார்.

அதில் அவர், “விமர்சனங்களை இன்முகத்துடன் எதிர்கொள்ளுங்கள். அதிகளவில் பொது மக்களின் பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதில் இடையூறுகளும், விமர்சனங்களும் வந்தால் இன்முகத்தோடு கடந்து செல்லுங்கள். வருகிற 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பணி தீவிரமடையும். குக்கிராமங்களில் கூட கட்சியை கொண்டு சேர்க்க வேண்டும். அங்கு 80 வயதில் உள்ளவர்களுக்கும் நம் கட்சிப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

1newsnationuser6

Next Post

"ராஜா கைய வச்சா.." "கலைஞர் தொட்டதெல்லாம் தங்கம் தான்" - கோவை விழாவில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உற்சாக பேச்சு.!

Thu Feb 8 , 2024
கோவை, சூலூர் பகுதியில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நவீன மருத்துவ வசதிகளின் பயன்பாட்டை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார். சூலூரில் அமைந்துள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களுக்கு அதி நவீன மருத்துவ சேவையை வழங்கி வருகிறது. பல்வேறு மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் கூடுதல் வசதிகளாக அதி நவீன கேத் லேப், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் […]

You May Like