பூஸ்டர் டோஸ் கோவிட் தடுப்பூசிக்கான இடைவெளி 6 மாதங்களாக குறைப்பு.. மத்திய அரசு அறிவிப்பு…

கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக அரசாங்கம் குறைத்துள்ளது.

தடுப்பூசி பற்றிய அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு – நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) – இரண்டாவது ஜப் மற்றும் பூஸ்டர் டோஸ் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க பரிந்துரைத்தது. இந்நிலையில் இந்த இடைவெளியை குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.. முன்னதாக, இரண்டாவது டோஸுக்கும் பூஸ்டர் டோஸுக்கும் இடையிலான கால அளவு 9 மாதங்களாக இருந்த நிலையில், தற்போது 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் இதுகுறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.. அதில் 18 முதல் 59 வயது வரை உள்ள அனைத்து பயனாளிகளுக்கான முன்னெச்சரிக்கை டோஸ், தனியார் கோவிட் தடுப்பூசி மையங்களில் (சிவிசி) 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்..

மேலும் “60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயனாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் அரசாங்க தடுப்பூசி மையங்களில், இரண்டாவது டோஸ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் முடிந்த பிறகு இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்…

Maha

Next Post

’சூப்பர் மார்க்கெட்டாக மாறும் ரேஷன் கடைகள்’..! ’இனி அனைத்து மளிகைப் பொருட்களும் விற்பனை’..!

Thu Jul 7 , 2022
தமிழக ரேஷன் கடைகளில் சூப்பர் மார்க்கெட் போன்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 35,323 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 10,279 பகுதி நேர கடைகள் அடங்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை தரமானதாக வழங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக அவ்வப்போது ரேஷன் கடைகளில் […]

You May Like