லாட்டரியில் அடித்த ஜாக்பாட்!… விமானம், சொகுசு வீடு வாங்கி இளம்பெண் அசத்தல்!… எத்தனை கோடி பரிசு தெரியுமா?

கனடாவில் இளம்பெண் ஒருவர் விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டில், ரூ.290 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், விலையுயர்ந்த கார், விமானம், சொகுசு வீடு உள்ளிட்டவைகளை வாங்கி அசத்தியுள்ளார்.

கனடாவை சேர்ந்தவர் ஜூலியட் லாமோர். 18 வயதான இவருக்கு பிறந்த நாள் பரிசாக அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாத்தாவின் உதவியுடன் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் lotto 6 -49 லாட்டரியை ஜூலியட் வாங்கியுள்ளார். இதையடுத்து, லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த ஜூலியட், தனது பக்கத்து வீட்டுக்காரர் பரிசு வென்றதை அறிந்ததும், தானும் டிக்கெட் வாங்கியது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தனக்கு ஏதேனும் பரிசு கிடைத்துள்ளதா? என்று பார்ப்பதற்காக ஆப் மூலம் செக் செய்தபோது, இந்திய மதிப்பில் 290 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதை கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்.

இந்த சந்தோஷமான செய்தியை தனது குடும்பத்தாரிடம் பகிர்ந்த ஜூலியட், 2 கோடி ரூபாய் மதிப்பிற்கு அவரின் 5 குடும்ப உறுப்பினர்களுக்கும் கார் வாங்கி கொடுத்துள்ளார். இது தவிர 100 கோடி ரூபாய் மதிப்பிலான விமானம், லண்டனில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பங்களா உள்ளிட்டவைகளை வாங்கியுள்ளார். தனது எதிர்காலத்திற்காக 150 கோடி ரூபாயினை சேமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பயின்று படித்துவரும் ஜூலியட், லாட்டரில் அடித்த பணத்தின் மூலம், தனது தாத்தா மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் உலகின் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்க்க உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.

Kokila

Next Post

ரயில் நிலையத்தின் பெயர் ஏன் மஞ்சள் நிற பலகையில் எழுதப்படுகிறது தெரியுமா..? இதுதான் காரணம்..

Thu Feb 9 , 2023
நாம் அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது ரயிலில் சென்றிருப்போம்.. இந்திய இரயில்வே உலகின் நான்காவது பெரிய இரயில்வே அமைப்பாகும்.. மேலும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வேயாக இந்திய ரயில்வே உள்ளது. இந்தியாவில் மொத்தம் 7,000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன.. பேருந்துகளை விட ரயிலில் டிக்கெட் விலை குறைவு, வசதியான பயணம் என பல காரணங்களால் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள்.. ஆனால் ரயில் நிலையங்களின் பெயர்கள் எப்போதும் […]

You May Like