பழங்குடியின பெண்ணை உயிரோடு எரித்த நில அபகரிப்பாளர்கள்..! வலியால் துடிப்பதை வீடியோ எடுத்த கொடூரம்..!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடியினப் பெண் ஒருவரை, நில அபகரிப்பாளர்கள் எரித்துக்கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குணா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ராம்பியாரி சகாரியா (38) என்ற பெண்ணின் குடும்பத்திற்கு, அரசு நலத்திட்டத்தின் கீழ் நிலம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிலத்தை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்துள்ளனர். பின்னர் அந்த நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டு சகாரியாவின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ராம்பியாரி சகாரியா, தனது நிலத்தில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற அவரது கணவர் அர்ஜூன் சகாரியா, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

பழங்குடியின பெண்ணை உயிரோடு எரித்த நில அபகரிப்பாளர்கள்..! வலியால் துடிப்பதை வீடியோ எடுத்த கொடூரம்..!
சம்பவம் நடந்த இடம்

இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 பேர் சேர்ந்து தன்னை எரித்துக்கொல்ல முயன்றதாக கணவரிடம் ராம்பியாரி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் ஆகியோர் மீது ராம்பியாரியின் கணவர் அர்ஜூன் போலீசில் புகார் அளித்துள்ளார். தன் மனைவியைத் தேடி நிலத்திற்கு சென்றபோது, பிரதாப், ஹனுமத், ஷியாம் கிரார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் டிராக்டரில் ஏறிச் சென்றதாக கூறி உள்ளார். மேலும், தன் மனைவி துடிப்பதை அந்த 3 பேரும் வீடியோ எடுத்ததாகவும், அது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர். மேலும், சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

இந்தியாவில் புதிய ஒமிக்ரான் துணை மாறுபாடு... ஆபத்தானதா..? நிபுணர்கள் விளக்கம்..

Mon Jul 4 , 2022
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை.. 2 வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது.. கொரோனாவில் இருந்து படிப்படியாக உலகம் மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு உலகை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழி தடுப்பூசி தான் என்று கூறப்பட்டாலும், […]

You May Like