”நாங்கள் கண்ட புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே”..!! எம்ஜிஆர், ஜெயலலிதாவாக மாறிய விஜய்-சங்கீதா..!! பரபரப்பு போஸ்டர்..!!

நடிகர் விஜய் ரசிகர்களால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த தகவல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துள்ளது. அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளார். மேலும், அந்த கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்தே அவர் தனது கட்சி பணிகளைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரைக்கும் போஸ்டர் கலாச்சாரத்திற்கும் எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. அது அரசியல் கட்சி தொண்டர்களாக இருந்தாலும் சரி, விஜய் போன்ற நடிகர்களின் ரசிகர்களாக இருந்தாலும் சரி தங்கள் பாணியில் அதிரடி போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பி விடுவார்கள்.

அந்த வரிசையில் தற்போது, விஜய்யை எம்.ஜி.ஆர் போலவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதா போலவும் சித்தரித்து, ‘ நாங்கள் கண்ட புரட்சி தலைவரே – புரட்சி தலைவியே’ எனக் குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். மதுரை மாநகர் தெற்கு மாவட்ட தொண்டரணி என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தற்போதை வைரலாகி வருகிறது.

1newsnationuser6

Next Post

'நீதிபதி முன்பு சம்மதம் தெரிவித்துவிட்டு இப்போ வந்து இப்படி சொல்றீங்க’..!! மன்சூர் அலிகானை வெச்சி செய்த நீதிபதிகள்..!!

Wed Jan 31 , 2024
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை மன்சூர் அலிகான் பேசி இருந்தார். இந்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக அவர் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த நடிகைகள் த்ரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் […]

You May Like