பெண் தாக்கப்பட்ட விவகாரம்..!! பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க 3 தனிப்படை விரைவு..!!

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது தங்கை ஆண்டாள், பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாகப் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வந்ததையொட்டி, சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 21-ஆம் தேதி இரவு பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியைச் சேர்ந்த நிவேதா, மேலும் ஒருவர் என 3 பேரும் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரையும், அவரது சகோதரி தேவியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த தேவியை அவரது உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேவி, பயத்தின் காரணமாக இரண்டு நாட்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததாகத் தெரிகிறது.

இதனையடுத்து, தேவியின் உறவினர்கள் அறிவுரையின் படி, அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் மற்றும் பாஜக நிர்வாகி நிவேதா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டூர்புரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி, கார் ஓட்டுனர் ஸ்ரீதர், நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி உள்ளே புகுந்து தாக்குதல், காயப்படுத்ததுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். மேலும், அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க கோட்டூர்புரம் ஆய்வாளர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கூடுதலாக ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மும்பை, டெல்லி, குஜராத் ஆகிய இடங்களில் அமர் பிரசாத்தை தேடி வருகின்றனர்.

1newsnationuser6

Next Post

”நாங்கள் கண்ட புரட்சி தலைவரே - புரட்சி தலைவியே”..!! எம்ஜிஆர், ஜெயலலிதாவாக மாறிய விஜய்-சங்கீதா..!! பரபரப்பு போஸ்டர்..!!

Wed Jan 31 , 2024
நடிகர் விஜய் ரசிகர்களால் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரவுள்ளதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்த தகவல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வந்துள்ளது. அவர் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய உள்ளார். மேலும், அந்த கட்சியின் பெயர் “தமிழக முன்னேற்ற கழகம்” என தகவல் வெளியாகியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலைக் குறிவைத்தே அவர் தனது கட்சி பணிகளைத் தொடங்கியுள்ளார். […]

You May Like