
சென்னை : சென்னையில் கொரோனா பரிசோதனை தீவிரமடைந்துவரும் நிலையில் இன்று 81 நடமாடும் மருத்துவ சேவைகளையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் அதன் பங்களிப்பு சென்னையில் 70 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி பாதிப்புள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபடதொடங்கிய தமிழக அரசு, அதற்காக 173 நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டுவருகிறது.

இதனை தொடர்ந்துசென்னையில் இன்று 81 நடமாடும் மருத்துவமனைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் மருந்தாளுநர், ஓட்டுநர் ஆகியோர் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அறிகுறி இருப்பவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் தமிழக அரசு சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடமாடும் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் மேலும் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவ்வாறு மேற்கொண்டால் மட்டுமே தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்தி மற்றவர்களை காக்க முடியும் என்பதற்கு தான் சுகாதாரத்துறை செயல்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.