கவனம்… நீட் தேர்வர்களுக்கு இது அனைத்தும் கட்டாயம்…! தேசிய தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு….!

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் மற்றும் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள நேற்று முதல் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இருந்து தங்களது நுழைவுச் சீட்டை சிரமமின்றி பதிவிறக்கம் செய்து வருகின்றனர். நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்தாண்டு நீட் நுழைவுத்தேர்வு நடைபெறகிறது. இதற்கான தேர்வு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்த தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு மைய நுழைவு பகுதியில் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம். நுழைவு சீட்டுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி. மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டை தேர்வறை கண்காணிப்பாளரிடம் கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்.  பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதே போல ஆடைகள் பிரச்சனை தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும். கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், ப்ளூடூத், ஹெட்போன், பேனா, உளவு கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர், ஸ்டோரேஜ் டிவைஸ் உள்ளிட்டவை தேர்வு கூடத்திற்குள் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வந்து விபத்தில் சிக்கிய நபர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்…! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…!

Vignesh

Next Post

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. இங்கு மட்டும் தான்..

Wed Jul 13 , 2022
மாங்கனி திருவிழாவை ஒட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் சிவபெருமானே அம்மையே என்றழைத்த, காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் எளிமையான […]

You May Like