”எடப்பாடியை கதிகலங்க விட்ட ஓபிஎஸ் டீம்”..!! ரூ.1 கோடி பேரம்..!! அடுத்து வீடியோதான்..!! அதிரும் அதிமுக..!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கே.பி.முனுசாமி அதிமுக நிர்வாகி சீட் பெற பணம் கேட்டதாக புகார் தெரிவித்தார். அதேபோல், வரும் சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தன்னிடம் ரூ. 1 கோடி பேரம் பேசிய ஆடியோவையும் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் பேசும் நபர், அண்ணே வணக்கம் நான் கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசும் நபர் (கே.பி. முனுசாமி என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்) சொல்லுமா என்கிறார். அதற்கு எதிர்முனையில் பேசிய நபர் 50 ரெடி செய்துவிட்டேன்,. அதை 11 மணிக்கு கொடுத்துவிடுகிறேன். மீதமுள்ள 50ஐ மாலைக்குள் ரெடி செய்கிறேன், தற்போது முதல் 50 பணத்தை எங்கே கொண்டு வரட்டும் என கேட்டார்.

அதற்கு கே.பி.முனுசாமி என சொல்லப்படும் நபர், நான் என் மகனை அனுப்புகிறேன். அவரிடம் கொடுத்துவிடு என்கிறார். இந்த ஆடியோவை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு போட்டு காண்பித்தார். மேலு,ம் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில் கே.பி. முனுசாமி ஓபிஎஸ் கட்சிக்கு என்ன செய்தார் என கேட்கிறார். ஆனால் இந்த ஆடியோ மூலம் கே.பி .முனுசாமி பணத்திற்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் மட்டுமே உழைப்பவர் என தெரியவந்துவிட்டது. இதை தொண்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால்தான் நான் இந்த ஆடியோவை வெளியிட்டேன். அவர் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாவிட்டால் அவர் குறித்த வீடியோவையும் வெளியிடுவேன். அது போல் தங்கமணி, வேலுமணி குறித்த வீடியோவையும் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

”ஆயிஷா படுக்க அவரு புடிக்க”..!! ”ஒரே ஜாலிதான் போல”..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

Thu Feb 16 , 2023
பிக்பாஸ் பிரபலம் ஆயிஷா, ஒருவழியாக தன்னுடைய காதலர் யார் என புகைப்படம் வெளியிட்டு அறிவித்துவிட்ட நிலையில், இவர்களின் ரொமான்டிக் போட்டோஸ் சில சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. வெள்ளித்திரை நடிகைகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் ஆயிஷா. இவர், சமீபத்தில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இருந்தே தனக்கென ஒரு வட்டம் போட்டுக்கொண்டு […]

You May Like