நுபுர் சர்மாவுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட நபர், இதை செய்தால்..! சொத்துக்கள் அனைத்தையும் கொடுப்பேன், வலை வீசும் போலீசார்..!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியில் வசித்து வரும் ஒருவர், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவின் தலையை துண்டிப்பவருக்கு தனது வீடு மற்றும் சொத்துக்களை சன்மானமாக வழங்குவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரப்பப்பட்டு வருகிறது. வீடியோ பதிவிட்ட அந்த நபர் சல்மான் சிஷ்டி என அடையாளம் காணப்பட்டதாக கூறுகின்றனர்.

அந்த வீடியோவில், நுபுர் சர்மாவின் தலையை யாராவது கொண்டு வந்தால் தனது வீட்டையும், சொத்தையும் எழுதி தருவதாக அவர் கூறியுள்ளார். அவர் வீடியோவில் கூறியிருப்பது‌ என்னவென்றால், குவாஜா சாஹேப் மற்றும் முகமது சாஹேப், ஆகியோரின் பெருமைக்கு, பாஜக தலைவர் நுபுர் சர்மா துரோகம் செய்து விட்டார். அதனால், அவரின் தலையைக் கொண்டுவருபவருக்கு நான் எனது வீட்டையும், நிலங்களையும், என்னுடைய எல்லா சொத்தையும் கொடுப்பேன். மேலும் நாடு முழுவதும் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்று அவர் வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் சங்வானின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தொடர்பாக காவல்துறை நிர்வாகத்தின் அணுகுமுறை மிகவும் கண்டிப்பானது, வீடியோவில் சல்மான் சிஷ்டி போதையில் காணப்படுகிறார். இது தொடர்பாக, தர்கா மற்றும் அஞ்சுமான் அதிகாரிகளிடமும் காவல்துறையினர் பேசியுள்ளனர். எனவே இந்த வீடியோ பரவுவதை தடுக்க அறிவுறுத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட சல்மான் சிஷ்டி தர்கா காவல் நிலைய பகுதியில் வசிப்பவர், காவல்துறையினர் சல்மானை தேடி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Baskar

Next Post

6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!

Tue Jul 5 , 2022
வரும் கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாத கோடை விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாடவேளைகளில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு […]

You May Like