மத போதகரின் மன்மத லீலை மாட்டிக்கொண்டதால், போக்சோவில் கைது செய்த போலீசார்…!

கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (53). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஸ்டீபன் ராஜ் கிறிஸ்தவ மத போதகராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் ராஜ் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியின் தாய், தந்தை வியாபார விஷயமாக வெளியே சென்றிருந்தனர். சிறுமியின் ஆயாவும் கடைக்கு சென்றிருந்தார். இதனால் சிறுமி மற்றும் அவருடைய தம்பி, தங்கைகள், மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் மத போதகர் ஸ்டீபன் ராஜ் அங்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த 15 வயது சிறுமியை வீட்டின் வெளியே வர சொல்லி அழைத்துள்ளார். பிறகு வீட்டில் இருந்த சிறுமியின் தங்கையை மற்றும் தம்பியை வீட்டில் இருந்த ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு, ஸ்டீபன் ராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த சிறுமி அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு கத்தியுள்ளார். சிறுமி கத்திய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியின் வீட்டிற்கு ஓடிவந்து பார்த்தனர். அப்போது சிறுமி அழுது கொண்டே, நடந்தது பற்றி அவர்களிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மத போதகர் ஸ்டீபன் ராஜை பிடித்து செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு போக்சோ தொடர்பான வழக்கு என்பதால் இந்த வழக்கை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகர் ஸ்டீபன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இந்திய அணி..! தோல்விக்கு இதுதான் காரணம்..!

Tue Jul 5 , 2022
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், தொடரை வெல்லும் முனைப்பில் இந்த போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக […]
ஜோ ரூட் - பேர்ஸ்டோவ் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய இந்திய அணி..! தோல்விக்கு என்ன காரணம்?

You May Like