மது பிரியர்களே… தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது…!

தமிழக முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது.

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி கொள்ளளவுகளில் விறக்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்.

1newsnationuser2

Next Post

குழந்தைகள் அதிபுத்திசாலியாக வளர, இந்த ஒரு பொருளை மட்டும் உணவில் சேர்த்துக்கோங்க.!

Thu Feb 1 , 2024
பொதுவாக குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவுகளை கொடுப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஊட்டச்சத்தானதாக குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையில்லாமல் இருப்பதால் அத்தகைய உணவுகளை உண்பதற்கு மறுக்கின்றனர். ஊட்டச்சத்தானதாகவும், சுவையானதாகவும் நிறைந்த இந்த ஒரு உணவு பொருளை தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதாவது ஊட்டச்சத்து நிறைந்த சுவையான அக்ரூட் பருப்புகள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருந்து வருகிறது. இந்த […]

You May Like