மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ரிப்போர்ட்டர் பலி …

சென்னை ஜாபர்கான் பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டபள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம்அடைந்து சிகிச்சை பெற்று வந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கி புதியதலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் முத்துக்கிருஷ்ணன் .இளம் வயதான இவர் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ம் தேதி அவர் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜாபர்கான்பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இதை கவனிக்காமல் தவறி விழுந்தார். பள்ளத்தில் இருந்த இரும்பு கம்பிகள் முத்துக்கிருஷ்ணன் உடலில் பலமாக குத்தியது. இதனால் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விசாரணை மேற்கொண்டனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணனுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்த முத்துக்கிருஷ்ணனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பல மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Next Post

ரஷ்யாவின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது...

Sun Oct 23 , 2022
ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று சிபெரியா நாட்டில் விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபெரியா நாட்டில் ரஷ்ய நாட்டின் போர் விமானம் விழுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. கீழே விழந்த அடுத்த நொடியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது இதனால் பெரும் பபரபரப்பு ஏற்பட்டது. சிபெரியாவில் இக்குட்ஸ்க் என்ற பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்து குழு உறுப்பினர்கள் உயிரிழந்ததாக […]

You May Like