ஏமாற்றி சிறுமையை அழைத்துச் சென்ற பள்ளி பேருந்து ஓட்டுனர்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!

வில் உள்ள புனே பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 15 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.   மாணவி தினமும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு பள்ளி பேருந்தில் சென்று பேருந்தில் ஓட்டுனர் ஓட்டுனர் உடன் அந்த மாணவிக்கு நல்ல அறிமுகம் இருந்துள்ளது மேலும் மேலும் அந்த மாணவி பள்ளி முடிந்தவுடன் டியூஷனுக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று அந்த பேருந்து ஓட்டுனர், அந்த மாணவி படிக்கும் டியூஷனுக்கு சென்று, டியூசன் ஆசிரியரிடம் சில காரணத்தைச் சொல்லி மாணவியை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார். மாணவியும் பழக்கமானவர் என்பதால் அவர் சொல்வது உண்மை என்று நம்பி அவருடன் சென்றுள்ளார்.  அந்த ஓட்டுநர் மாணவியை ஒரு பாழடைந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். சந்தேகம் அடைந்த அந்த மாணவி இங்கு எதற்காக அழைத்து வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதுவரை அன்பாக பேசிய அந்த ஓட்டுநர், அதன் பிறகு மிரட்டி அந்த மாணவியை வலுக்கட்டமாக இழுத்துச் சென்றுள்ளார்.

அந்த மாணவிக்கு விஷயம் புரிய ஆரம்பித்து பயத்தில் தப்பிக்க நினைத்த போது அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பிறகு இங்கு நடந்தது யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி விட்டுச் சென்றுள்ளார்.  ஆனால் தப்பித்தால் போதும் என்று வீடு வந்து சேர்ந்த சிறுமி, பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஓட்டுனர் மீது போக்சோ உட்பட பல்வேறு பிரிவுகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Baskar

Next Post

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற வேண்டாம் அண்ணாமலை காட்டம்..!

Tue Jul 19 , 2022
தமிழக அரசு நஷ்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், வெளியில் இருந்து மின்சாரத்தை வாங்குவது சரியா? என தமிழக அரசுக்கு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். சேலத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை கூற தேவையில்லை. மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு வலியுறுத்தவில்லை. மத்திய அரசு மானியம் […]

You May Like