சைதை துரைசாமி மகனை தேடும் பணி திடீர் நிறுத்தம்!… இமாச்சல் பிரதேச போலீஸார் சொன்ன தகவல்!

இமாச்சல் பிரதேசத்தில் சட்லெஜ் ஆற்றில் சைதை துரைசாமியின் மகன் வெற்றி சென்ற கார் கவிழ்ந்த நிலையில், அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக முன்னாள் நிர்வாகியும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). தொழிலதிபராக இருக்கும் வெற்றி துரைசாமி, தனது நண்பர்களுடன் சேர்ந்து இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். அவருடன் அவரது உதவியாளர் கோபிநாத்தும் சென்றிருந்தார். இதனிடையே, லடாக்கில் சுற்றிப் பார்த்துவிட்டு சென்னை திரும்புவதற்காக அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.

காரை டென்சின் என்பவர் ஓட்டிச் சென்றார். கஷங் நலா பகுதி அருகே கார் சென்ற போது, டிரைவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நிலைத்தடுமாறிய கார் அங்கிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து, சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார், தீயணைப்புப் படையினர் ஆகியோர் வந்து அங்கு தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் ஓட்டுநர் டென்சினின் உடல் கைப்பற்றப்பட்டது. உதவியாளர் கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால், வெற்றி துரைசாமியை காணவில்லை. அவரை தேடும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக அவரை தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று மாலை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும், அவரை கண்டறிய 2 நாள் ஆகும் என்றும் இமாச்சல் பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser3

Next Post

’இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு’..!! பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்..!!

Tue Feb 6 , 2024
தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், ”எடப்பாடி பழனிசாமி பணத்திற்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு செயல்பட்டார். அவர் தன்னை சூப்பர் புரட்சி தலைவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 5 ஆண்டுகளிலும் அவரை ஒப்பந்தக்காரர்கள் மட்டுமே சந்திக்க முடிந்தது. தங்களை அவர் சந்திக்கவே இல்லை என்று கட்சிக்காரர்கள் குற்றம் சாட்டினர். அதிமுகவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை தவிர எல்லோரும் தயாராக இருக்கின்றனர். வழக்கு நிலுவையில் […]

You May Like