இந்திய தேர்தல் ஆணையர் பதவிக்காலம் 14-ம் தேதியுடன் நிறைவு…! இன்று டெல்லியில் முக்கிய கூட்டம்…!

இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

2024-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் அமைக்கும் பணிகளை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பதவிக்காலம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆணையத் தேர்வு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இருந்த நிலையில் சமீபத்தில் அது மாற்றப்பட்டு இது தொடர்பான மசோதா சட்டமாக கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இந்த புதிய சட்டத்தின் கீழ் முதல் முதலாக தேர்வு குழு கூட்டம் நடைபெறுகின்றது.

புதிய சட்டத்தின் படி பிரதமர் தலைமையில் உள்ள தேர்வு குழுவில் பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் கொண்ட மூன்று பேர் குழு தேர்வு செய்யும். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக புதிய தேர்தல் ஆணையர் யார் தேர்ந்தெடுக்கப்பட போகிறார்கள் என்ற மிக முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.

1newsnationuser2

Next Post

நெருங்கிய 2024 தேர்தல்...! அரசியல் கட்சிகள் என்னென்ன செய்ய கூடாது..‌.? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!

Wed Feb 7 , 2024
தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது உட்பட எந்த வடிவத்திலும் குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் போது கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை […]

You May Like