எல்லாம் ரெடியா இருங்க… TET தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்…! ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!

TET தாள் 1 தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை உள்ள தேதிகளில் இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Image

Also Read: Polytechnic மாணவ, மாணவிகளுக்கு ரூ.50,000 உதவித்தொகை..‌.! உடனே விண்ணப்பிக்கவும்….! ஆட்சியர் அறிவிப்பு

Vignesh

Next Post

பிஎஃப் வட்டி இந்த தேதிக்குள் செலுத்தப்படும்.. பிஎஃப் பேலன்ஸை எப்படி சரிபார்ப்பது..?

Wed Jul 6 , 2022
ஓய்வூதியத்திற்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குவதால், வேலை செய்யும் ஒவ்வொரு நபருக்கும் பிஎஃப் பணம் என்பது மிகவும் முக்கியமானது. மேலும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது கூட பிஎஃப் பணத்தின் நன்மைகளை பெற முடியும்.. பிஎஃப் கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இபிஎஃப்ஓ வழங்குகிறது.. இபிஎஃப்ஓ அமைப்பில் சுமார் 7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர்.. இந்நிலையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.5%ல் […]

You May Like